கோப்புப் படம் 
இந்தியா

அசாமில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள இருமல் மருந்து பாட்டில்கள் பறிமுதல்: 3 பேர் கைது 

அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள ஏராளமான இருமல் மருந்து பாட்டில்களை மாநில போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

DIN

கோல்பரா(அஸ்ஸாம்): அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள ஏராளமான இருமல் மருந்து பாட்டில்களை மாநில போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து கோல்பாரா மாவட்டத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளர் அனுராக் சர்மா கூறியதாவது:

அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் இருமல் மருந்து பாட்டில்கள் கடத்தப்படவுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிஆர்பிஎஃப் வீரர்கள், கோல்பாரா மாவட்ட காவல்துறையினர் என பல குழுக்களாக ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். பைகான் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக மேகாலயாவில் உள்ள துரா நோக்கிச் சென்ற ஒரு பிக்கப் வேன் உள்பட இரண்டு வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

சோதனையின் போது பிக்கப் வேனில் இருந்து 5,075 இருமல் மருந்து பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருமல் மருந்து பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று அனுராக் சர்மா கூறினார்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட இருமல் மருந்து பாட்டில்களின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக கோல்பாரா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலதிகாரிகள் தொடந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT