முகப்பு
இந்தியா

ஹவுரா-புரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இன்று ரத்து

இடியுடன் கூடிய மழை காரணமாக ஹவுரா-புரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:58 PM
கோப்புப்படம்
பகிர்:

இடியுடன் கூடிய மழை காரணமாக ஹவுரா-புரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஒடிசா மாநிலம், புரியில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் பெய்த மழை காரணமாக மேல்நிலை கம்பி சேதமடைந்ததையடுத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் துலாகபட்னா-மஞ்சூரி சாலை நிலையத்திற்கு இடையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

எனினும், இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து நிலைய மேலாளர் கூறுகையில், இடியுடன் கூடிய மழையால் ஓட்டுநர் அறையின் முன் கண்ணாடி மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் சேதமடைந்தன. மேலும் துலாகபட்னா-மஞ்சூரி சாலை நிலையத்தில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றார். ஒடிசாவின் புரி நகருக்கும் மேற்கு வங்கத்தின் ஹெளரா நகருக்கும் இடையே இயங்கும் ஒடிஸாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமா் மோடி தில்லியில் இருந்து காணொலி முறையில் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →