பெங்களூரூ: கர்நாடக முதல்வர் சித்தராமையா, தன்னை சந்திக்க வருபவர்கள் அன்பை வெளிப்படுத்த விரும்பினால் பூங்கொத்து, சால்வைகள் அளிப்பதை தவிர்த்துவிட்டு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து முதல்வர் சித்தராமையா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
இனி தனிப்பட்ட மற்றும் பொது நிகழ்ச்சிகளின் போது, மரியாதை நிமித்தமாக எனக்கும் வழங்கும் பூங்கொத்து அல்லது சால்வைகளை வாங்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன்.
எனவே, என்மீது அன்பும் மரியாதையும் செலுத்த நினைப்பவர்கள், எனக்கு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குங்கள். உங்கள் அன்பும் பாசமும் என் மீது தொடர்ந்து இருக்கட்டும் என சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.