அகர்தலா: நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் கடத்தல்களை தடுக்கும் வகையில் எல்லைப் பாதுகாப்புப் படை நடத்திய சோதனையில், ஏராளமான கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா - வங்கதேசம் இடையே இயக்கப்படும் பேருந்தை அகர்தலாவில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்தபோது, அதில் எண்ணற்ற கைப்பேசிகள் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
பேருந்தில் வந்த பயணிகள் அனைவரது உடைமைகளும் சோதனை செய்யப்பட்டது. அப்போது, பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த ஒரு தகரம் மட்டும் அப்போதுதான் பொருத்தப்பட்டிருந்தது போல இருந்ததை அறிந்த படை வீரர்கள், உடனடியாக அந்த தகரத்தை அகற்றியபோது, அதில் 665 கைப்பேசிகள் இருந்ததைக் கண்டறிந்தனர்.
உடனடியாக, ஓட்டுநரும், நடத்துநரும் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இப்பகுதியில், இதுபோன்ற பல பொருள்கள் கடத்தப்பட்டு வருவதும், அதனை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சாமர்த்தியமாகக் கண்டுபிடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.