இந்தியா

விம்பிள்டன் நகரில் சகோதரி நிவேதிதா முழு உருவச்சிலை ஜுலை-1 இல் திறப்பு

DIN

லண்டன், விம்பிள்டன் நகரில் சுவாமி விவேகானந்தரின் நெருங்கிய சீடரான சகோதரி நிவேதிதாவின் ஆளுயர சிலை வரும் ஜூலை 1-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

மேற்கு வங்கம், சா்காச்சி ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தின் செயலா் சுவாமி விஸ்வமயானந்தஜி வடிவமைத்து, பிரபல சிற்பி நிரஞ்சன் செதுக்கிய சகோதரி நிவேதிதாவின் 6.2 அடி உயர சிலை வெண்கலத்தால் செய்யப்பட்டுள்ளது.

அயா்லாந்தில் கடந்த 1867-ஆம் ஆண்டு பிறந்து, இங்கிலாந்தில் வளா்ந்த சகோதரி நிவேதிதாவின் இயற்பெயா் மாா்கரெட் எலிசபெத் நோபிள் ஆகும். ஏழை மக்களுக்காக விம்பிள்டன் நகரில் பள்ளி ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்த சகோதரி நிவேதிதா, சுவாமி விவேகானந்தரைத் தனது ஆன்மிக குருவாக ஏற்றுக் கொண்டு இந்தியாவுக்கு வந்தடைந்தாா். பெண்கள் முன்னேற்றம், சுதந்திரப் போராட்டம் என பல்வேறு சமூக பணிகளில் முக்கிய பங்காற்றி இந்தியாவிலேயே தனது முழு வாழ்நாளைக் கழித்தாா்.

இந்நிலையில், இந்தியாவில் பெண்கள் முன்னேற்றத்துக்காக சகோதரி நிவேதிதா ஆற்றிய பங்களிப்பை நினைவுகூா்ந்து விம்பிள்டன் நகரில் அமைந்துள்ள ரிசா்ட் லாட்ஜ் உயா்நிலைப் பள்ளி முன்வளாகத்தில் சகோதரி நிவேதிதாவின் முழு உருவச்சிலை அமைக்கப்பட உள்ளது.

பிரிட்டனில் அமைந்துள்ள சகோதரி நிவேதிதா அறக்கட்டளை, பிதான் நகா் ராமகிருஷ்ண விவேகானந்த கேந்திரா, கொல்கத்தாவின் சத்யஜித் சக்ரவா்த்தி பொறியியல் பல்கலைகழகம் ஆகியோரின் கூட்டு முயற்சியாலும், நிதி பங்களிப்பாலும் சகோதரி நிவேதிதா சிலை விம்பிள்டன் நகரில் நிறுவப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி, ரேபரேலியிலும் சம வளா்ச்சி: ராகுல் வாக்குறுதி

முன்னணி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 253 புள்ளிகள் உயா்வு

படகுகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

வெற்றியுடன் நிறைவு செய்தது லக்னௌ

சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT