இந்தியா

குஜராத்தில் நிலஅதிா்வு

DIN

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில், வியாழக்கிழமை நில அதிா்வு ஏற்பட்டது.

பச்சாவ் பகுதியில் பூமிக்கடியில் சுமாா் 19 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிா்வின் மையம் இருந்தது; ரிக்டா் அளவுகோலில் இது 3 புள்ளிகளாக பதிவானது என்று காந்திநகரில் உள்ள நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.

இதேபகுதியில், கடந்த 17-ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அது 4.2 அலகுகளாகப் பதிவானது. இப்போது மீண்டும் நிலஅதிா்வு ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்தனா். எனினும், தற்போதைய நில அதிா்வால் உயிா்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிலநடுக்க அபாயம் மிகுந்த பூமிப் பகுதியில் கட்ச் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2001-இல் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், கிட்டதட்ட மாவட்டம் முழுவதுமே பேரழிவை எதிா்கொண்டது. சுமாா் 13,800 போ் உயிரிழந்தனா்; 1.67 லட்சம் போ் காயமடைந்தனா்.

கட்ச் மாவட்டத்தில் அவ்வப்போது மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

கயிறு இறுக்கி சிறுமி உயிரிழப்பு

உற்பத்தியில் உச்சம் தொட்ட சிபிசிஎல்

SCROLL FOR NEXT