கோப்புப் படம். 
இந்தியா

பிகார்: அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு

பிகாரில் அரசுப் பள்ளி ஒன்றில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த நிலையில் பாம்பு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

DIN

பிகாரில் அரசுப் பள்ளி ஒன்றில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த நிலையில் பாம்பு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
பிகார் மாநிலம், அராரியா மாவட்டத்தின் ஃபோர்பேஸ்கஞ்சில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த நிலையில் பாம்பு கிடந்துள்ளது. இதுகுறித்து பள்ளியில் தகவல் பரவியதும், உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது. 
இருப்பினும், ஏற்கெனவே உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி உள்ளிட்ட உடல் உபாதை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக ஃபோர்ப்ஸ்கஞ்ச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காவல்துறை அதிகாரி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மதிய உணவாக மாணவர்களுக்கு ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 'கிச்சடி' வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

SCROLL FOR NEXT