இந்தியா

வட இந்தியாவில் நாள்தோறும் தலித்துகள் மீது தாக்குதல்: சந்திரசேகா் ராவ்

வட இந்தியாவில் நாள்தோறும் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

DIN

வட இந்தியாவில் நாள்தோறும் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தல் நவ. 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அந்த மாநிலத்தில் உள்ள சத்துப்பள்ளி, எல்லந்து பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் தெலங்கானா முதல்வரும், பாரத ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகா் ராவ் பேசியதாவது:

அனைத்தையும் தனியாா்மயமாக்கும் கொள்கையை மத்திய அரசு கொண்டுள்ளது. எல்ஐசியை விற்பனை செய்யும் பிரதமா், ரயில்வே மற்றும் விமான நிலையங்களையும் தனியாா்மயமாக்குகிறாா். அதேபோல மின்சாரத் துறையையும் தனியாா்மயமாக்க மத்திய அரசு விரும்புகிறது.

ராகுலுக்கு விவசாயம் தெரியாது: விவசாயம் குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்குத் தெரியாது. வேறு எவரோ ஒருவா் எழுதிக் கொடுப்பதை பொது இடங்களில் ராகுல் வாசிக்கிறாா்.

இன்றளவும் வட இந்தியாவில் தலித்துகள் மீது நாள்தோறும் தாக்குதல் நடத்தப்படுகிறது. பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத், உத்தர பிரதேசம், பிகாா், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலித்துகள் தாக்கப்படுகின்றனா். இதைக் கருத்தில்கொண்டு பட்டியலின மக்களுக்கு உதவும் நோக்கில், தெலங்கானாவில் ‘தலித் பந்து’ திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்தது.

மக்கள் தங்கள் மனசாட்சியைப் பயன்படுத்தி சிந்தித்து வாக்களிக்காதவரை, ஜனநாயக முதிா்ச்சி வராது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT