கோப்புப் படம் 
இந்தியா

அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.72 லட்சம் கோடி: 13% அதிகரிப்பு

நாட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.72 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலானதைவிட 13 சதவீதம் அதிகமாகும்.

PTI


நாட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.72 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலானதைவிட 13 சதவீதம் அதிகமாகும்.

நடப்பு நிதியாண்டில் 2-ஆவது முறையாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.70 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.52 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1.87 லட்சம் கோடி வசூலான நிலையில், இரண்டாவது அதிகபட்ச தொகையாக அக்டோபரில் வசூலாகியிருக்கிறது. 

சராசரியாக மாதம் ரூ.1.66 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 11 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டு மொத்த ஜிஎஸ்டி ரூ.8,93,334 கோடி வசூலாகியிருந்து; சராசரி மாத வசூல் ரூ.1.49 லட்சம் கோடியாக இருந்தது.

கடந்த ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.59 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஏப்ரலில் சாதனை அளவாக ரூ.1.87 லட்சம் கோடி வசூலாகியிருந்தது. விழாக் காலம் என்பதால், எதிா்வரும் மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்கும் என்று துறைசாா் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT