சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: கபில் சிபல் விமர்சனம்!
மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் எதிர்க்கட்சி தலைவர்களை பாஜக குறிவைத்து வருகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் விமர்சனம்
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவுக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதனைத் தொடர்ந்து தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவாலுக்கும் அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்படலாம் என கருதப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிக்க: வெளியானது தங்கலான் டீசர்!
Advertisement
Advertisement
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியதாவது: “பாஜக தற்போது அரவிந்த் கேஜரிவாலை குறிவைத்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்குவதால் இன்னும் பல எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைப்பார்கள்.
சத்தீஸ்கரில் சிபு சோரன் மற்றும் பல அதிகாரிகளை டார்கெட் செய்தார்கள். மகாராஷ்டிராவில் என்ன நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைத்தனர். மேற்கு வங்கத்தில் அபிஷேக் பானர்ஜி டார்கெட் செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனைச் சட்டம் பாஜக அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து நீதிமன்றங்கள் விழித்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.