இந்தியா

2 இந்திய நகரங்களுக்கு புதிய அங்கீகாரம்: யுனெஸ்கோ!

DIN

இந்தியாவில் உள்ள இரண்டு நகரங்கள் உலகளவிலான படைப்பூக்கமிக்க நகரங்கள் பட்டியலில் இணையவுள்ளன.

அக்.31 உலக நகரங்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது, ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ. 

கேரளத்தில் உள்ள கோழிக்கோடும் மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரும் இந்தப் பட்டியலில் இணைகின்றன.

கலாச்சாரம், படைபூக்கம் மற்றும் புத்தாக்க நகர மேம்பாட்டுக்கான அங்கீகாரமாக உலகம் முழுவதுமிருந்து 55 நகரங்களை இந்தப் பட்டியலில் புதிதாக சேர்த்துள்ளது, யுனெஸ்கோ.

கேரள இலக்கிய திருவிழாவைக் குறிக்கும் எழுத்துகள்

கோழிக்கோட்டுக்கு இலக்கிய நகரம் என்கிற அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. கேரள இலக்கிய விழா மற்றும் புத்தக வெளியீடுகள் தொடர்ச்சியாக அங்கு நடைபெற்று வருகின்றன.

குவாலியருக்கு, இசைக்கான நகரம் என்கிற அங்கீகாரத்தை யுனெஸ்கோ வழங்கியுள்ளது.

இந்தியாவின் பழமையான ஹிந்துஸ்தானி இசை, நாட்டுப்புற இசை மற்றும் பக்தி இசையில் குவாலியர், தனித்துவமான கலாச்சாரத்தையும் பன்முகத்தன்மையையும் கொண்டுள்ளது.

மேலும், மொரோக்கோ நாட்டின் காசாபிளாங்கா, நேபாளின் காத்மாண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ உள்ளிட்ட 55 நகரங்கள் இந்த வலைப்பின்னலில் புதிதாக இணைகின்றன.

ஐக்கிய படைப்பூக்க நகரங்களுக்கான வலைப்பின்னலின் (யுசிசிஎன்) கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள இந்த நகரங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

2024-ம் ஆண்டு ஜூலையில் போர்ச்சுகலில் இந்தக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலிவுட் ராணி..!

11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மே.வங்கம் முதலிடம்!

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு: சென்னையில் 98.47% தேர்ச்சி!

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

டர்போ டிரைலர்!

SCROLL FOR NEXT