கோப்புப் படம் 
இந்தியா

மாதத்தில் 10 நாள்களாவது அலுவலகத்திற்கு வர வேண்டும்: இன்ஃபோசிஸ்

வாரத்தின் 5 நாள்களிலும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அறிவுறித்தியிருந்தது.

DIN

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஆரம்பகட்ட மற்றும் இடைநிலை ஊழியர்கள், மாதத்தில் குறைந்தது 10 நாள்களாவது அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வாரத்தின் 5 நாள்களிலும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அறிவுறித்தியதைத் தொடர்ந்து, தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனம் சார்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்திய மென்பொருள் நிறுவனம் இன்ஃபோசிஸ். இந்த நிறுவனத்திற்கு பல்வேறு நகரங்களில் கிளை அலுவலகங்கள் உள்ளன. 

இந்த அலுவலகங்களில் பணிபுரியும் ஆரம்பகட்ட மற்றும் இடைநிலை ஊழியர்கள் இனி மாதத்திற்கு குறைந்தது 10 நாள்கள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், அலுவலகத்தில் இருந்தவாறு பணிபுரியும் சூழலை வலுவாக்கும் முயற்சியை நோக்கிச் செல்கிறோம். இதனால், ஆரம்பகட்ட மற்றும் இடைநிலை ஊழியர்கள் நவம்பர் 20ஆம் தேதிமுதல் மாதத்துக்கு 10 நாள்களாவது அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT