இந்தியா

கேரள முதல்வருக்கு கொலை மிரட்டல்!

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அம்மாநில காவல்துறை தலைமையகத்தில் போலீஸார் தெரிவித்தனர்.

DIN


கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அம்மாநில காவல்துறை தலைமையகத்தில் போலீஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை மாலை காவல் தலைமையகத்தின் கட்டுப்பாடு அறைக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் ஒருவன் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இதையடுத்து அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் கேரள காவல்துறை சட்டத்தின் உள்ள பிரிவுகளின் கீழ் மிரட்டல் விடுத்த தொலைபேசி எண்ணுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT