ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார். 
இந்தியா

இந்தியாவின் மிகப் பெரிய நன்கொடையாளர் இவர்தான்!

இந்தியாவில் அதிகம் நன்கொடை செய்தவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

DIN

ஹுருன் இந்தியா நிறுவனம் 2022 - 2023 நிதியாண்டில் அதிக நன்கொடை அளித்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தனி நபராகவும் குடும்பமாகவும் 119 பேர் ரூ.5 கோடிக்கும் மேல் பல்வேறு உதவிகளுக்காக நன்கொடைகளை வழங்கியுள்ளனர்.

இதில், ரூ.2042 கோடியை அளித்து நாட்டில் அதிக நன்கொடை அளித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார். நிதியாண்டு கணக்கிற்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.5.6 கோடியை நன்கொடையாக அளித்திருக்கிறார்.

இரண்டாம் இடத்தில் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1,774 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர். முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினர் ரூ.336 கோடி அளித்து மூன்றாம் இடத்தில் உள்ளனர். குமார் மங்களம் பிர்லா & குடும்பத்தினர் ரூ.287 கோடி, கௌதம் அதானி ரூ.285 கோடியுடன் நான்காம் மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளனர். ஆச்சரியமாக, இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் நான்கு பேர் அதிக நன்கொடை அளித்தவர்கள் பட்டியலில் உள்ளனர். பட்டியலில் வழக்கமாக இடம்பெறும் நன்கொடையாளர்களைத் தவிர புதிதாக 25 பேர் இணைந்துள்ளனர்.

இதில், பெரும்பாலானவர்கள் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காகவே நன்கொடைகளை அளித்துள்ளனர். ஆனால், ஷிவ் நாடார் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களுங்காக நன்கொடை செய்திருக்கிறார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

SCROLL FOR NEXT