வாக்கு வங்கிக்காக சாதிவாரி கணக்கெடுப்பு: அகிலேஷ் யாதவ்
வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பு தேவைப்படுகிறது என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பு தேவைப்படுகிறது என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.
மத்தியப் பிரதேச மாநிலம் திகம்கார் பகுதியில் சமாகவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். பிரசாரக் கூட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர்,
Advertisement
Advertisement
ஏழைகளுக்கான நியாயவிலைக் கடைகளில் எதுவும் கிடைக்காத சூழலே மாநிலத்தில் நிலவுகிறது. இந்த நிலையை ஏற்படுத்திய பாஜகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும். அதற்காக காங்கிரஸ் கட்சிக்கு நீங்கள் வாக்களிக்க நினைக்கலாம். ஆனால், காங்கிரஸ் தந்திரம் செய்து மக்களை ஏமாற்றும். தற்போது மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் கட்சி கோருவதும் வாக்கு வங்கிக்காக மட்டுமே. இதனை மக்கள் சிந்திக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.