தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் 
இந்தியா

தெலங்கானா முதல்வரின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

DIN

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், மிஸோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேசிய, மாநில கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இதில், தெலங்கானா மாநிலத்துக்கு வருகிற நவம்பர் 30 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மகபூப்நகர் மாவட்டம் தேவரகத்ரா பகுதியில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள  முதல்வர் சந்திரசேகர் ராவ், ஹெலிகாப்டரில் புறப்பட்டார். 

அப்போது திடீரென ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக்கோளாறைக் கண்டறிந்து கூறியதால் முதல்வரின் பண்ணை வீட்டில் உடனடியாக தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT