இந்தியா

சத்தீஸ்கர் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 

சத்தீஸ்கா் மாநிலத்தில் நாராயண்பூா், தண்டேவாடா, பிஜபூா், கோன்டா, கேன்கா் உள்ளிட்ட 10 தொகுதிகளில் இன்று(நவ.7) காலை 7 முதல் பிற்பகல் 3 மணி வரையும், இதர 10 தொகுதிகளில் காலை 7 முதல் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சத்தீஸ்கரில் நக்ஸல்களின் கண்ணிவெடி தாக்குதலில் திங்கள்கிழமை சிக்கி 2 தோ்தல் பணியாளா்களும், எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் ஒருவரும் காயமடைந்தனா். நக்ஸல் பாதிப்பு பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

20 தொகுதிகளுக்கு உள்பட்ட 5,304 வாக்குப் பதிவு மையங்களில் 60,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நக்ஸல் அச்சுறுத்தல் உள்ள பகுதி வாக்குச்சாவடிகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாராயண்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது நக்ஸல்களின் தாக்குதலில் பாஜக மூத்த தலைவா் ஒருவா் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

நான் திமுகவின் பி டீமா? பன்னீர் செல்வம் விளக்கம்!

செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!

கோபி, சுதாகர் படத்தின் போஸ்டர் வெளியீடு!

நான் அழுதுவிடுவேன் என பயம் வந்துவிட்டது!: Kamal Hassan | Agaram foundation

SCROLL FOR NEXT