இந்தியா

மகாராஷ்டிரம்: தாணேயில் பருத்தி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலி

மகாராஷ்டிரம் மாநிலம், தாணேயில் உள்ள பருத்திக் கிடங்கு ஒன்றில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலியாகினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

DIN

தானே: மகாராஷ்டிரம் மாநிலம், தாணேயில் உள்ள பருத்திக் கிடங்கு ஒன்றில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலியாகினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: 

தாணேவின் பிவாண்டி பகுதியில் உள்ள பருத்திக் கிடங்கு ஒன்றில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீ விபத்தில் ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. 

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு பல்வேறு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றர். இந்த தி வீபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். 

தீயை அணைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 

விபத்து குறித்து தாணே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT