திக்விஜய் சிங் 
இந்தியா

ஓபிசி பிரிவினரை காங்கிரஸ் ஏமாற்றியதா?

ஓபிசி பிரிவை காங்கிரஸ் கட்சி ஏமாற்றவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் விளக்கம் அளித்துள்ளார். 

DIN

ஓபிசி பிரிவை காங்கிரஸ் கட்சி ஏமாற்றவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் விளக்கம் அளித்துள்ளார். 

வாய்ப்புகளையும் பதவிகளையும் கொடுக்காமல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஓபிசி) காங்கிரஸ் கட்சி ஏமாற்றிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியிருந்தார். 

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா பகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பிரதமரின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த திக்விஜய் சிங், பிரதமர் நரேந்திர மோடி பொய் கூறுபவர் என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் நான்கு மாநில முதல்வர்களில் 3 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான் எனத் தெரிவித்தார்.

மேலும், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன், தேவேந்திர தோமர் மகன் கோடிக்கணக்கான பணப்பரிவத்தனை குறித்து பேசும் விடியோ வைரலானது குறித்து பேசிய அவர், இது தொடர்பான விசாரணை விரைந்து நடத்தப்பட வேண்டும். அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடமும் விரைவில் விசாரணை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூக்கி... நித்யா மெனன்!

கடலோரக் கவிதைகள்... ரவீனா தாஹா!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.88.08 ஆக நிறைவு!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது உண்மைதான்! - ஜெய்ஷ்-இ-முகமது

காந்தாரா சேப்டர் 1: டப்பிங் பணிகளை முடித்த ருக்மணி வசந்த்!

SCROLL FOR NEXT