இந்தியா

டீ தராததால் அறுவை சிகிச்சையை பாதியில் விட்டுச் சென்ற மருத்துவர்!

மகாராஷ்டிர மாநிலத்தில் டீ தராததால் கோபமடைந்த மருத்துவர் அறுவை சிகிச்சையை பாதியிலேயே விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலத்தில் டீ தராததால் கோபமடைந்த மருத்துவர் அறுவை சிகிச்சையை பாதியிலேயே விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூர் மாவட்டம், மெளடா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 8 பெண்களுக்கு செவ்வாய்க்கிழமை கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

இதில், 4 பெண்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், மருத்துவர் பாலவி மருத்துவமனை ஊழியரிடம் டீ கேட்டுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் டீ கிடைக்காததால் கோபமடைந்த மருத்துவர், அறுவை சிகிச்சையை பாதியிலேயே விட்டுச் சென்றார்.

மீதமுள்ள 4 பெண்களுக்கு மயக்கம் மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு தயாராக இருந்த நிலையில், மருத்துவரின் செயல் உறவினர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

உடனடியாக மாவட்ட மருத்துவ அலுவரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வேறொரு மருத்துவர் வரவழைக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டு மருத்துவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட மருத்துவ அதிகாரி உறுதி அளித்துள்ளார்.

மேலும், அறுவை சிகிச்சையை பாதியில் விட்டுச் சென்ற மருத்துவர் பாலவிக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT