இந்தியா

ஹோட்டலில் காதலியை கொன்றுவிட்டு காதலன் தூக்கிட்டு தற்கொலை!

வடகிழக்கு தில்லியில் 28 வயது இளைஞர் ஒருவர் தனது காதலியை கொலை செய்துவிட்டு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் இன்று தெரிவித்தனர்.

DIN

புதுதில்லி: வடகிழக்கு தில்லியில் 28 வயது இளைஞர் ஒருவர் தனது காதலியை கொலை செய்துவிட்டு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் இன்று தெரிவித்தனர். 

ஓயோ சேவை மூலம் ஷோரப் மற்றும் ஆயிஷா நான்கு மணி நேரத்திற்கு ஹோட்டலில் அறையை முன்பதிவு செய்துள்ளதாக முதல் கட்ட விசாரனை மூலம் தெரியவந்துள்ளது என்று துணை கமிஷனர் (வடகிழக்கு) ஜாய் திர்கி தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் ஷோரப்(28), ஆயிஷா(27) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் ஆயிஷாவின் சடலத்தின் அருகே படுக்கையில் ஹிந்தியில் அரை பக்க தற்கொலைக் கடிதம் கிடந்ததாகவும், இருவரும் காதலித்து வந்ததாகவும், இருவரும் சேர்ந்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

உடற்கூறாய்வுக்குப் பிறகு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 10-08-25

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

“போப்பா..! போ.. போ!” யானையை செல்லமாக காட்டிற்குள் விரட்டிய மக்கள்!

கரும்பும் தமிழரும்...

உபி.: கிணற்றுக்குள் இறங்கியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 சகோதரர்கள் பலி

SCROLL FOR NEXT