இந்தியா

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வேட்புமனுத் தாக்கல்

தெலங்கானாவின் கஜ்வெல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் இன்று(வியாழக்கிழமை) வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

DIN

தெலங்கானாவின் கஜ்வெல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்று(வியாழக்கிழமை) வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

மிஸோரத்திலும் சத்தீஸ்கரில் முதற்கட்டத் தேர்தலும் நடந்து முடிந்துள்ள நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களுக்கு இந்த மாதத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேசிய, மாநில கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இதில், தெலங்கானா மாநிலத்துக்கு வருகிற நவம்பர் 30 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ், கஜ்வெல்(Gajwel) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட இன்று(வியாழக்கிழமை) வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

கடந்த 2014, 2018 ஆம் ஆண்டுகளில் இதே தொகுதியில் போட்டியிட்டு சந்திரசேகர் ராவ் வெற்றி பெற்றுள்ளார். 

தெலங்கானாவில் தற்போது கேசிஆரின் பாரத ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT