இந்தியா

திருமலை: 20 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த வைகுந்த ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள்

DIN

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கான வைகுந்த வாசல் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 20 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

வைகுந்த ஏகாதசியையொட்டி, திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் டிசம்பா் 23 முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை 10 நாள்கள் பக்தா்களுக்கு வைகுந்த வாசல் தரிசனம் வழங்கப்படும். இந்த தரிசனத்துக்கான 2.25 லட்சம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வரும் நவம்பா் 10- ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி ஆன்லைனில் டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட்ட 20 நிமிடங்களில் 2.25 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. 

இதன்மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 6 கோடியே 75 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. மேலும் வைகுந்த வாசல் தரிசனத்துக்கான 10 நாள்களுக்கு 4.25 லட்சம் இலவச நேரடி தரிசன டோக்கன்கள் டிசம்பா் 22- ஆம் தேதி திருப்பதியில் உள்ள 9 மையங்களில் உள்ள 100 கவுன்ட்டா்களில் அளிக்கப்பட உள்ளன. 

அத்துடன், டிசம்பா் 23 முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், முதியோா் மற்றும் என்ஆா்ஐ-களுக்கான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுந்த ஏகாதசி ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT