இந்தியா

திகார் சிறையில் இருந்து வெளிவந்தார் மணீஷ் சிசோடியா!

DIN

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா உடல் நலம் குன்றிய அவரது மனைவியைச் சந்திப்பதற்காக திகார் சிறையில் இருந்து  வெளியே வந்தார்.

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சிபிஐயால் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் திகார் இருந்து வருகிறார். அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் அவரது மனைவிக்கு உடல்நிலை பாதிப்படைந்துள்ளதால், அவரை சந்திப்பதற்கு ஐந்து நாட்கள் அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த கோரிக்கையை மறுத்த நீதிமன்றம் 6 மணி நேரம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. 

ரூஸ் அவென்யூ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கி உத்தரவிட்டதன் பேரில், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை திகார் சிறையில் இருந்து மதுரா சாலையில் உள்ள ஏபி 17 வளாகத்திற்கு தில்லி போலீஸார் இன்று (நவம்.11) அழைத்து வந்தனர்.

மணீஷ் சிசோடியாவை சந்திப்பதற்கு அவரது மனைவியை தவிர வேறு எந்த நபரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. மேலும் அவரது வீட்டிற்குள்ளும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்னதாக, மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த அனைத்து ஜாமின் மனுக்கள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10 படங்களுக்குமேல் நடிப்பேன் என நினைக்கவில்லை: 100-ஆவது பட விழாவில் மனோஜ் பாஜ்பாயி!

ராயன் வெளியீட்டுத் தேதி!

மீண்டும் வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன்!

கோட் படத்தில் சிவகார்த்திகேயன்?

நீட் தேர்வில் மோசடி: குஜராத்தில் ஆசிரியர் உள்பட மூவர் கைது

SCROLL FOR NEXT