இந்தியா

தில்லியில் மேலும் 10 குடும்ப நீதிமன்றங்கள்!

தில்லியில் மேலும் 10 நீதிமன்றங்களை அமைக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 

DIN

தில்லியில் மேலும் 10 குடும்ப நீதிமன்றங்கள் அமைக்க தில்லி ஆளுநர் விகே சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். ஏற்கனவே தில்லியில் 21 குடும்ப நீதிமன்றங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த புதிய நீதிமன்றங்கள் மூலம் 10 நீதிபதிகள் மற்றும் மற்ற 71 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  2019ல், 5 முதல் 10 ஆண்டுகள் வரை நிலுவையிலிருந்த குடும்ப வழக்குகளைக் கருத்தில் கொண்டு, மேலும் 10 குடும்ப நீதிமன்றங்களை உருவாக்க முழுமையான நீதிமன்றம் பரிந்துரை செய்தது.

இதுவரை 46,000 குடும்ப வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் குறைந்த எண்ணிக்கையிலான வழக்குகளை சகெத் குடும்ப நீதிமன்றம் கொண்டுள்ளது. 1321 வழக்குகள் இங்கு நிலுவையில் உள்ளன.

அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை ரோஹினியிலுள்ள குடும்ப நீதிமன்றம் கொண்டுள்ளது. இங்கு 3,654 வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

ஒரு நாளைக்கு 150 முதல் 200 குடும்ப வழக்குகள் பதிவாவதாக ஒரு குடும்ப நீதிமன்றம் தெரிவிக்கிறது. மேலும் 80 சதவீத பணியாளர்கள் மற்ற துறைகளிலிருந்து இங்கு திசை திருப்பப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீலம் தயாரிப்பின் பெயரில் போலி ஆடிஷன்கள்!

40% முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்! முதலிடத்தில் இருப்பவர் யார்?

மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் பலி: ரூ. 20 லட்சம் நிதியுதவி; கணவருக்கு அரசு வேலை..!

ஜார்க்கண்டில் இயல்பு வாழ்க்கை முடங்கியது: கனமழைக்கு 5 பேர் பலி!

உலகின் கடைசி சாலை முடியும் இடம்! அதைத் தாண்டி நிலப்பரப்பே இல்லையாம்!!

SCROLL FOR NEXT