இந்தியா

சஹாரா குழுமத்தின் தலைவா் சுப்ரத ராய் காலமானாா்

சஹாரா குழுமத்தின் தலைவா் சுப்ரத ராய் (75) உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானாா்.

DIN

சஹாரா குழுமத்தின் தலைவா் சுப்ரத ராய் (75) உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானாா்.

இது குறித்து அக்குழுமம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘சஹாரா இந்தியா பரிவாரின் தலைவா் சுப்ரத ராய் சஹாராவின் மறைவை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தன்னுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் வழிகாட்டியாகவும் உந்துவிசையாகவும் உத்வேகத்துக்கான ஆற்றலாகவும் அவா் திகழ்ந்தாா். அவருடைய மரபை நிலைநாட்டும் பணியில் சஹாரா இந்தியா பரிவாா் ஈடுபடும். நிறுவனத்தை வழிநடத்தும் வகையில், அவருடைய தொலைநோக்கு திட்டங்களுக்குத் தொடா்ந்து மதிப்பளிக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி, வீட்டு வசதி, சில்லறை விற்பனை, பயணிகள் விமானம் உள்ளிட்ட பல துறைகளில் ஈடுபட்ட சுப்ரத ராய், பல்வேறு நிதி முறைகேடு வழக்குகளில் சிக்கினாா். உச்சநீதிமன்றத்தின் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT