ராஜஸ்தானில் பிரியங்கா காந்தி 
இந்தியா

தேர்தல் நேரத்தில் சாதி, மதம் குறித்து ஏன் பேசுகிறார்கள்? - பிரியங்கா காந்தி கேள்வி

தேர்தலில் சாதி, மதம் குறித்து ஏன் பேசுகிறார்கள் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

DIN

தேர்தலில் சாதி, மதம் குறித்து ஏன் பேசுகிறார்கள் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

200 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானுக்கு வருகிற நவ. 25 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில், 'தேர்தல் நேரத்தில் மதம், சாதி என்று ஏன் பேசுகிறார்கள் என யோசிக்க வேண்டும். மக்களுக்காக வேலை செய்யும் உண்மையான தலைவர், சாதி, மதத்தை வைத்து வாக்கு கேட்க மாட்டார். அவருடைய உழைப்பின் அடிப்படையில் மக்களிடம் வாக்கு கேட்பார். 

கடந்த 18 ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்தில் பாஜகவினர் ஆட்சி செய்கிறார்கள். ஆனால், அவர்கள் தாங்கள் செய்த எந்த வேலையையும் கூறி வாக்கு கேட்பதில்லை. மாறாக, சாதி, மதம் பற்றி பேசுகிறார்கள்.

பெரிய தொழிலதிபர்களின் நன்மைக்காகவே பாஜக செயல்படுகிறது. ஏழை, நடுத்தர மக்களைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை.

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராட்டக்களத்தில் இறங்கியதால் பாஜக முற்றிலும் பிளவுபட்டுள்ளது. 

ராஜஸ்தானில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும்' என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னியாகுமரியில் மேற்குக் கடற்கரைச் சாலையில் தமிழ் எண்களுடன் மைல் கல்!

அழகாகப் பூத்தது டாட்டூ... ப்ரியா பிரகாஷ் வாரியர்!

பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு!

ஆசியக் கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணி அறிவிப்பு!

கூலி ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT