மேற்குவங்கத்தின் ஹௌரா மாவட்டத்தில் உள்ள குஸுரி நஸ்கர் பாரா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை மற்றும் குடோனில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீவிபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்த தகவல் தெரியவில்லை. மேலும் இதனால் உயிர்சேதம் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் எந்தவித தகவலும் வெளிவரவில்லை.
இதையும் படிக்க: ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களை ஆதரிக்காதவர் பிரதமர் மோடி: ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் தாக்கு
இதே மேற்கு வங்கத்தின் ஹௌரா மாவட்டத்தில் உள்ள ஒரு சணல் தொழிற்சாலையில் நேற்று (திங்கள்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.