முகப்பு
இந்தியா

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் டிசம்பர் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:23 AM
மணீஷ் சிசோடியா
பகிர்:

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் டிசம்பர் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தில்லி  கலால் கொள்கை ஊழல் தொடர்பாக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சிபிஐயால் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருந்து வருகிறார். அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

சிசோடியா, ஜாமீன் கோரி பல முறை மனு தாக்கல் செய்த நிலையில் ஜாமீன் வழங்க தில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வருகிறது. 

இந்நிலையில், இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 21 ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று(செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளது. 

மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கிய வேண்டிய வழக்கு ஆவணங்களை அமலாக்கத்துறை இன்னும் வழங்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →