இந்தியா

கடலில் குப்பைகளைக் கொட்டிய நபர் மீது வழக்கு!

மகாராஷ்டிரத்தில் இந்திய நுழைவாயில் அருகேவுள்ள கடலில் குப்பையைக் கொட்டிய நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

DIN

மகாராஷ்டிரத்தில் இந்திய நுழைவாயில் அருகேவுள்ள கடலில் குப்பையைக் கொட்டிய நபர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளத்தில் ஆக்கப்பூர்வமாக இயங்கக்கூடியவர். அவர் இன்று பகிர்ந்திருந்த விடியோவை பலரும் பகிர்ந்து வந்தனர். 

அதில், இளைஞர் ஒருவர் காரில் மூட்டை மூட்டையாக கொண்டுவந்த குப்பைகளை இந்தியா கேட் அருகே கடலிக் கொட்டுவதைப் போன்று பதிவாகியிருந்தது. இதனை அப்பகுதியிலிருந்த ஒருவர் விடியோ எடுத்துள்ளார். 

இந்த விடியோவைப் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, இதைப் பார்க்கவே வருத்தமாக உள்ளது. குடிமக்களின் இத்தகையத மனநிலை மாறவில்லையெனில், நகரத்தின் உள்கட்டமைப்பு எந்தவிதத்திலும் மாறப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த விடியோ வைரலானதைத் தொடர்ந்து, குப்பைகளைக் கொட்டிய நபர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT