இந்தியா

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு காங்கிரஸ் அரசே பொறுப்பு: பிரதமர் மோடி

ராஜஸ்தானில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு காங்கிரஸ் அரசே பொறுப்பு என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். 

DIN

ராஜஸ்தானில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு காங்கிரஸ் அரசே பொறுப்பு என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். 

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸும், ஆட்சியைக் கைப்பற்ற பாஜகவும் கடுமையாக மோதி வருகின்றன.

அதையொட்டி தேர்தலுக்கான கடைசிநாள் பிரசாரத்தில் வியாழக்கிழமை பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: “கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளைப் போல வேறு எந்த ஆட்சிக் காலத்திலும் மக்கள் பார்த்திருக்க மாட்டார்கள். 

ராஜஸ்தானில் இருக்கக்கூடிய எந்தப் பெண்ணும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை. மாநிலம் முழுவதும் நமது தாய்மார்களும், சகோதரிகளும் பாஜக கொடியினை ஏந்திச் செல்வதைக் காண முடிகிறது. 

எதிரணியில் உள்ள தலைவர்கள் மோடியை தாக்கிப் பேசினால் அவர்களது வேலை முடிந்துவிட்டதாக நினைக்கின்றனர். அவர்களுக்கு பாஜகவின் வலிமை புரிவதில்லை. 

ராஜஸ்தானின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக இத்தனை பெண்களும் கூடியுள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பளிக்காத காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பளிக்க மாட்டார்கள்.” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 199 தொகுதிகளுக்கு நவம்.25-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் டிசம்.3-ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. 73 தொகுதிகளில் மட்டும் வென்ற பாஜக எதிர்க்கட்சியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!

தங்கம் விலை அதிரடியாக உயர்வு! எவ்வளவு?

2,833 காவலர்கள் பணிக்கான தேர்வு தேதி அறிவிப்பு!

தவெக மாநாடு: பணியில் 200 செவிலியர்கள் உள்பட 600 மருத்துவக் குழுவினர்!

பக்தா்கள் பணத்தில் மட்டுமே கோயில் திருப்பணிகள் நடைபெறுகின்றன: இந்து முன்னணி

SCROLL FOR NEXT