முதல்வர் ஆதித்யநாத் 
இந்தியா

அயோத்தி ராமர் கோயிலில் முதல்வர் ஆதித்யநாத் வழிபாடு!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் உள்ள ஹனுமான் கர்ஹி மற்றும் ராமர் கோயிலில் இன்று வழிபாடு செய்தார்.

DIN

அயோத்தி: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் உள்ள ஹனுமான் கர்ஹி மற்றும் ராமர் கோயிலில் இன்று வழிபாடு செய்தார்.

ஹெலிப்காப்டர் மூலம் ராம் கதா பார்க் வந்த முதல்வர் ஆதித்யநாத் ஹனுமான் கர்ஹிக்கு சென்ற சாமி தரிசனம் செய்த பிறகு ஆரத்தி எடுத்து மகிழ்ந்தார். இதனையடுத்து நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக இருக்குமாறு அங்கிருந்து வாழ்த்தினார். அதே நேரத்தில், ராமர் கோயில் கட்டுமானத்தின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார்.

நவம்பர் 9ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற போது தனது அமைச்சர்களுடன் இரு கோயில்களையும் பார்வையிட்டார். பிறகு 12ஆம் தேதி அங்கு நடைபெற்ற 'தீபோத்சவ்' நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்த மாதத்தில் மட்டும் மூன்றாவது முறையாக ஆதித்யநாத் ராமர் மற்றும் ஹனுமான் கர்ஹியில் வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT