இந்தியா

சம்பளம் கேட்ட தலித் ஊழியரின் வாயில் செருப்பைத் திணித்த முதலாளி!

சம்பளம் கேட்ட தலித் பணியாளரை அடித்து, அவர் வாயில் செருப்பைத் திணித்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளார் அந்நிறுவனத்தின் பெண் தொழிலதிபர்.

DIN

குஜராத் மாநிலம், மோர்பி நகரத்தில், சம்பளம் கேட்ட முன்னாள் பணியாளரைத் தாக்கி அவர் வாயில் செருப்பைத் திணித்து மன்னிப்பு கேட்க வைத்த அவலம் அரங்கேறியுள்ளது.  இதனைத் தொடர்ந்து பெண் தொழிலதிபர் ஒருவர் மீதும் அவரது பணியாளர்கள் சிலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட 21 வயது நிரம்பிய இளைஞர் நிலேஷ் தல்சன்யா, தனது சகோதரர் மற்றும் நண்பருடன் ராணிபா இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிட்டட் (Raniba Industries Pvt Ltd) அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். அந்தத் தனியார் நிறுவனத்திற்குத் தலைமை வகிப்பவர் பெண் தொழிலதிபர் விபுதி பட்டேல். 

அந்த நிறுவனத்தில் ஏற்றுமதித் துறையில் 16 நாள்கள் வேலை பார்த்ததற்கான சம்பளத்தை வழங்குமாறு நிலேஷ் கேட்டுள்ளார். அப்போது விபுதி பட்டேலின் சகோதரர் எனச் சொல்லப்படும் ஓம் பட்டேல், நிலேஷைத் தாக்கியிள்ளார்.

விபுதியும், அவரது பணியாளர்கள் சிலரும் நிலேஷைத் தாக்கி அவரை மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை சராமாரியாக தாக்கியுள்ளனர். 

மேலும் விபுதி பட்டேல் அவரது செருப்பை நிலேஷ் வாயில் திணித்து மன்னிப்புக் கேட்க வைத்துள்ளார். மேலும் ரவப்பர் சாலையில் நிலேஷைப் பார்த்தாலோ, அல்லது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தாலோ அவரைக் கொன்றுவிடுவேன் என்றும் விபுதி மிரட்டியதாக பாதிக்கப்பட்ட நிலேஷ் கூறியுள்ளார்.

மேலும் அவர்கள் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான சட்டப்பிரிவின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளது. குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிவேகம், குறைந்த வயதில் 880 கோல்கள்..! மெஸ்ஸி புதிய சாதனை!

ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

திமுக முப்பெரும் விழா தொடங்கியது! கனிமொழிக்கு பெரியார் விருதை வழங்கினார் ஸ்டாலின்!

சவுதி அரேபியா சென்ற பாக். பிரதமர்! ஒரே வாரத்தில் 3வது முறையாக மத்திய கிழக்கு பயணம்!

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

SCROLL FOR NEXT