மத்திய பிரதேசத்தில் இடியுடன் கூடிய பெய்த கனமழையின்போது மின் தாக்கியதில் தம்பதி உட்பட நான்கு பேர் பலியாகினர்.
மத்திய பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கமழை பெய்தது. கடந்த 24 மணிநேரத்தில் ஒருசில மாவட்டங்களில் மட்டும் 100மிமீட்டருக்கு அதிமான மழைப் பொழிவு பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தார் மாவட்டத்தின் உமர்பன் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியர் மற்றும் அவர்களது மகன் மீது மின்னல் தாக்கியது.
இந்த சம்பவத்தில் முகேஷ் (28) மற்றும் அவரது மனைவி சம்பா (27) சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களின் 10 வயது மகன் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதவிர ஜபுவா மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஜாவாலியா கிராமத்தில் உள்ள தனது விவசாய வயலில் வேலை செய்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவரும், பர்வானி மாவட்டம் ஜுனாஜிரா கிராமத்தில் மதியம் 48 வயது பெண் ஒருவரும் மின்னல் தாக்கியதில் பலியாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.