ஆந்திரம்: உயிரியல் பூங்காவில் கரடி தாக்கியதில் விலங்கு பராமரிப்பாளர் பலி
ஆந்திரத்தில் இந்திரா காந்தி உயிரியல் பூங்காவில் கரடி தாக்கியதில் பராமரிப்பாளர் பலியானார்.
ஆந்திரத்தில் இந்திரா காந்தி உயிரியல் பூங்காவில் கரடி தாக்கியதில் பராமரிப்பாளர் பலியானார்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இந்திரா காந்தி உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு விலங்கு பராமரிப்பாளராக நாகேஷ் பாபு(23) பணிபுரிந்து வந்தார். இன்று இவரை பூங்காவில் இமாலய வகை கறுப்புக் கரடி தாக்கியது. இதில் அவர் பலியானார்.
இதுகுறித்து விசாகப்பட்டினம் மிருகக்காட்சிசாலையின் கண்காணிப்பாளர் தெரிவித்ததாவது, நாகேஷ், விலங்குகள் இரவில் தங்கும் வீட்டில் அனைத்து கதவுகளையும் திறந்து வைத்துவிட்டு உள்ளே சென்று தூய்மை செய்துள்ளார்.
Advertisement
அப்போது அந்த வீட்டிற்குள் வந்த கரடி பாதுகாவலரை தாக்கியது. இதில் அவர் இடது கை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டு பலியானார் என்றார். பாபுவின் குடும்பத்திற்கு வனத்துறையினர் ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்தனர்.
தாக்குதலைத் தொடர்ந்து, கரடியை பூங்கா அதிகாரிகள் தேனைப் பயன்படுத்தி மீண்டும் அதன் கூண்டிற்குள் அடைத்துள்ளனர்.