முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் பெண் வாக்காளர்களே அதிகம்: 6 மாவட்டங்களில் 80% வாக்குகள் பதிவு!

ராஜஸ்தான் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடந்துமுடிந்த நிலையில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:26 AM
பகிர்:

ராஜஸ்தான் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடந்துமுடிந்த நிலையில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

6 மாவட்டங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநிலத்தின் பன்ஸ்வாரா, ஜெய்சால்மர், சித்தோர்கர், ஹனுமன்கர், ஜலவர் மற்றும் பிரதாப்கர் மாவட்டங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தனர்.

பன்ஸ்வாரா மாவட்டத்தில் 88.13 சதவீத வாக்குகளும், சித்தோர்கர் 80.41, ஹனுமன்கர் 82.52, ஜெய்சால்மரில் 82.32 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

குஷல்கர் சட்டமன்றத் தொகுதியான பன்ஸ்வாரா மாநிலத்தில் அதிகபட்சமாக 88.13 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது.

போகரன் சட்டமன்றத் தொகுதி 87.79 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், திஜாரா (86.11), நிம்பஹேரா (85.58), கட்டோல் (85.35), பாரி (84.22), மனோகர்தனா (84.12)வாக்குகள் பதிவாகியுள்ளன.

பெண்களின் அதிக வாக்கு சதவீதம் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தும் என் எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 3-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →