கோப்புப்படம் 
இந்தியா

உத்தரகண்ட் சுரங்கத் தொழிலாளர்கள் வீடு திரும்ப அனுமதி!

உத்தரகண்ட் சுரங்க விபத்தில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் வீடு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

DIN

உத்தரகண்ட் சுரங்க விபத்தில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் வீடு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்ததையடுத்து 41 தொழிலாளர்களும் வீடு திரும்ப அனுமதி தரப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட தொழிலாளர்களின் உடல் மற்றும் மன நலன் தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனைகள் அடிப்படையில் 41 தொழிலாளர்களின் உடல் மற்றும் மன நலன் நன்றாக உள்ளதால் வீடு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளா்களும் 17 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இரவு பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

17 நாள்களாக நீண்ட காத்திருப்பால் கவலையில் இருந்த உறவினா்கள், மீட்கப்பட்ட தொழிலாளா்களைக் கண்டதும் கண்ணீா்மல்க வரவேற்றனா். அந்தப் பகுதியே உணா்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டது.

சுரங்கப் பாதைக்குள் பணியமா்த்தப்பட்டிருந்த மருத்துவக் குழு, மீட்கப்பட்ட தொழிலாளா்களுக்கு முதல்கட்ட மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டது. இதைத் தொடா்ந்து, சில்க்யாரா சுரங்கப் பாதை பகுதியிலிருந்து 30 கி.மீ. தொலைவில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 41 படுக்கைகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவசரகால ஊா்திகள் மூலம் அவா்கள் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனைத்து தொழிலாளர்களையும் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலத்தூா் ஏரி மாநிலத்தின் 3-ஆவது உயிரியல் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு

சேரன்மகாதேவியில் 4 பேருக்கு வெட்டு: 3 சிறாா் கைது

ஒசூா் மேம்பாலத்தில் வியாழக்கிழமை முதல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்

விநாயகா் சிலைகளை முழுமையாக கரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

சுப நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவை சேகரிக்க வாகனம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT