இந்தியா

ஃபிளிப்கார்டு லாரியிலிருந்து கொட்டிய பணமழை.. அதுவும் ரூ.2,000 நோட்டுகள்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் தெருக்களில், ஃபிளிப்கார்டு நிறுவனத்தின் லாரியிலிருந்து பணமழை கொட்டிய சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

DIN

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் தெருக்களில், ஃபிளிப்கார்டு நிறுவனத்தின் லாரியிலிருந்து பணமழை கொட்டிய சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

சினிமாவில் மட்டுமே இதுவரை நாம் பார்த்த காட்சி ஒன்று, மும்பையின் சாலை ஒன்றில் திடீரென சம்பவித்தது.

மும்பை கேட்வே சாலையில், ஃபிளிப்கார்டு நிறுவனத்தின் ரூ.2,000 நோட்டுக் கட்டுகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, திடிரென விபத்தில் சிக்கி, அதிலிருந்த பெட்டிகள் திறந்து வானத்தில் 2,000 ரூபாய் தாள்கள் பறந்தன.

சாலைகளில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் முன்னால், காற்றில் 2,000 ரூபாய் நோட்டுகள் நடனமாடின. யாருக்கும் உடனடியாக என்ன செய்வது என்றே தெரியவில்லை. 

யாருக்கும் அதனை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று கூட தோன்றவில்லை. என்ன நடக்கிறது என்று தெரிந்த பிறகு, அனைவருக்கும் ஒரே குதூகலம்தான். ஒட்டுமொத்த சாலையும் திருவிழாவிற்குக் கூடிய மக்கள் போல மாறியது.

ஆனால், ஃப்ளிப்கார்ட் டிரக்கில் இவ்வளவு கணிசமான அளவு பணம் ஏற்றப்பட்டது ஏன்? இது ஒரு அசாதாரண நடவடிக்கையா, அல்லது வெளியில் கொட்டியதை விடவும்  அதிகமான பணம் டிரக்குக்குள் இருந்ததா? இது நடந்திருப்பது, குறிப்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் என்ற சலுகை விற்பனை  நெருங்கும் நிலையில் என்பதால், பல்வேறு ஊகங்களுக்கும் வித்திட்டது.

இந்த சம்பவத்தின் விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது பற்றி பலரும் தங்களது விமரிசனங்களையும், கருத்துகளையும் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள்.

மும்பை மக்கள் ஒரு கணம், ஒரு எதிர்பாராத நிகழ்வால் ஒன்றுபட்டிருந்தனர். அன்றாடம் வேலை வேலை என்று ஓடுபவர்களுக்கு மத்தியில், இதுபோன்ற ஒரு நிகழ்வு அப்பகுதி மக்களை சொல்லொணாத ஆனந்தத்தில் ஆழ்த்தியது.

ஆனால், என்ன 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு இன்றுதான் கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் ஒருநாள் தொடர்!

கூலி திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை: சென்னை உயர் நீதிமன்றம்

வரப்பெற்றோம் (11-08-2025)

சாதாரண சொற்களுக்குச் சட்டத்தில் சாதாரண அர்த்தம்தானா?

கோபி சுதாகர் மீது வழக்குப் போடுவது சமூக தீண்டாமையை காட்டுகிறது - Seeman

SCROLL FOR NEXT