இந்தியா

பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!

DIN

பாலஸ்தீன அதிபர் முஹமது அப்பாஸ் உடன் தொலைப்பேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 

பாலஸ்தீனத்துக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை செய்யவும் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார். 

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பாலஸ்தீன அதிபர் முஹமது அப்பாஸ் உடன் பேசினேன். காஸா அல் - அலி மருத்துவமனை தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்காக இரங்கல் தெரிவித்தேன். பாலஸ்தீன மக்களுக்காக மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து அனுப்புகிறோம் என உறுதியளித்தேன். காஸா எல்லையில் பயங்கரவாதம், வன்முறை மற்றும் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையை பகிர்ந்து கொண்டேன். இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை வலியுறுத்தினேன் எனப் பதிவிட்டுள்ளார். 

காஸாவின் வடக்கு பகுதியிலுள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT