அசாமில் நாணயங்களைக் கொண்டு துர்கா தேவி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது பலரைக் கவர்ந்துள்ளது. இதற்காக ரூ.11 லட்சம் மதிப்பிலான நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு கொல்கத்தா உள்ளிட்ட வட மாநிலங்களில் பந்தல்கள் அமைந்து துர்கா தேவி சிலை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
அந்தவகையில் அசாம் மாநிலம் நகோன் மாவட்டத்தில் நாணயங்களைக் கொண்டு துர்கா தேவி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரையிலான இந்திய ரூபாய் நாணயங்களைக் கொண்டு துர்கா தேவி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.