முதல்வர் பினராயி விஜயன் 
இந்தியா

களமச்சேரி குண்டுவெடிப்பு துரதிருஷ்டவசமானது: கேரள முதல்வர் 

களமச்சேரி குண்டுவெடிப்பு துரதிருஷ்டவசமானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

DIN

களமச்சேரி குண்டுவெடிப்பு துரதிருஷ்டவசமானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத கூட்டரங்கல் இன்று காலை மத வழிபாடு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென அடுத்தடுத்து குண்டு வெடித்தன. இதில் பெண் ஒருவர் பலியானார். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இருப்பினும் அதில் 7 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். மத வழிபாட்டு அரங்கில் குண்டு வெடிப்பு நடந்தது எப்பது என கேரள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குண்டு வெடிப்பு நடந்த இடம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விடுமுறையில் உள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்புமாறும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். சம்பவம் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம். அனைத்து உயர் அதிகாரிகளும் எர்ணாகுளத்தில் உள்ளனர். டிஜிபி சம்பவ இடத்துக்கு விரைந்தார். நாங்கள் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். விசாரணைக்கு பிறகே கூடுதல் விவரங்ள் தெரிய வரும் இவ்வாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT