இந்தியா

போர் குறித்து எகிப்து அதிபர் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

DIN

பிரதமர் நரேந்திரமோடி, சனிக்கிழமை (அக்.28) எகிப்து அதிபர் அப்தெல் அல்-சிசி உடன் அலைபேசியில் போர் குறித்து பேசியுள்ளார்.

இந்த உரையாடலில் இரு நாட்டு தலைவர்களும் மேற்கு ஆசியாவில் மோசமாகி வரும் பாதுகாப்பு மற்றும் மனிதத்துவ முரண்பாடுகள் குறித்து விவாதித்துள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் நரேந்திய மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில், “மேற்கு ஆசியாவில் மோசமாகி வரும் பாதுகாப்பு மற்றும் மனிதத்துவ சூழல் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டோம். பயங்கரவாதம், வன்முறை மற்றும் மக்களின் உயிரிழப்பு தொடர்பான கவலைகளையும் நாங்கள் பகிர்ந்து கொண்டோம். விரைவில் அமைதி, நிலையான சூழலை உருவாக்கவும், மனிதத்துவ உதவிகள் செய்ய வேண்டியிருப்பதன் அவசியத்தையும் உடன்பாடு கொண்டிருக்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

காஸாவில், இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் பேசிக் கொண்டதாக எகிப்து அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT