கோப்புப்படம் 
இந்தியா

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை அடுத்த திங்கட்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

DIN

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை அடுத்த திங்கட்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாா். இந்த நிலையில், தனது உடல்நிலையைக் குறிப்பிட்டு மருத்துவக் காரணங்களுக்காக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அமலாக்கத் துறையின் வாதத்தை ஏற்று இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

இதையடுத்து, அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்குரைஞா் ராம் சங்கா் மூலம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு உடனடியாகத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், உடல்நிலைப் பாதிப்பைக் கருத்தில் கொண்டு கோரப்பட்டிருந்த ஜாமீன் மனுவை உரிய வகையில் பரிசீலிக்காமல் சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதாகவும், அவா் தொடா்புடைய வழக்கில் அவரது ஜாமீன் கோரும் மனுவை நிராகரிக்க சகோதரா் தலைமறைவாக இருப்பதாகக் காரணம் கூறியிருப்பது சரியல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையை அடுத்த திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT