இந்தியா

கொள்ளையர்களை பிடிக்க போக்குவரத்தை முடக்கிய காவல்துறையினர்!

மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் 8 செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய இருவரை பிடிக்க காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது பலரை வியப்பில் ஆழ்த்தியது.

DIN

தானே: மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் 8 செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய இருவரை பிடிக்க காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது பலரை வியப்பில் ஆழ்த்தியது.

குற்றம் சாட்டப்பட்ட வாரிஸ் மிராஜ் கான்(24) மற்றும் முகமது ஜாபர் குரேஷி(30) ஆகியோர் அக்டோபர் 27 அன்று டோம்பிவிலி அருகே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் என்று உதவி போலீஸ் கமிஷனர் சுனில் குராடே தெரிவித்தார். இவர்கள் இருவரும் கடந்த 20ம் தேதி பள்ளி ஆசிரியையிடமிருந்து நகைகளைக் கொள்ளையடித்தவர்கள்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 394ன் கீழ் காவல்துறையினர் குற்றத்தை பதிவு செய்து  அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், தகவலின் அடிப்படையில், மூன்று இடங்களில் வலைவீசி, மோட்டார் சைக்கிளில் வந்த குற்றவாளியை கண்ட காவலர்கள் வேண்டுமென்றே போக்குவரத்தை தாமதப்படுத்தினர்.

இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, காவலர்கள் குழு அவர்களை மடக்கி பிடித்து ரூ.8.18 லட்சம் மதிப்புள்ள தங்கதை்தை மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT