முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: உ.பி.யைச் சேர்ந்த ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

புல்வாமா மாவட்டத்தில் உ.பி.யைச் சேர்ந்த ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Updated On : 30 அக்டோபர், 2023 at 2:13 PM
பகிர்:

புல்வாமா மாவட்டத்தில் உ.பி.யைச் சேர்ந்த ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் சிங்யை இன்று பிற்பகல் 12.45 மணியளவில் பயங்கரவாதிகள் சுட்டனர். இதில் காயமடைந்த அவர் பின்னர் பலியானார். 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.

Advertisement

முன்னதாக ஈத்கா மைதானத்தில் உள்ளூர் மக்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது காவல் ஆய்வாளர் மஸ்ரூர் அகமது வானி மீது பயங்கரவாதிகள் 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இந்த சம்பவத்தில் அவர் படுகாயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.