ஒடிசா ஆளுநராக ரகுவர் தாஸ் இன்னும் சற்று நேரத்தில் பதவியேற்க உள்ள நிலையில், இன்று காலை லிங்கராஜ் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார்.
ஜார்கண்டில் இருந்து அவரது ஆதரவாளர்களும், குடும்ப உறுப்பினர்களும் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளனர், அங்கு அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட உள்ளது.
ஒடிசாவின் புதிய ஆளுநராக தாஸ் அக்டோபர் 18 அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டார்.
ஒடிசா ஆளுநராக இருந்த கணேஷி லாலுக்குப் பதிலாக தாஸ் நியமிக்கப்படுகின்றார்.
கடந்த 2014 முதல் 2019 வரை ஜார்க்கண்டின் முதல் பழங்குடியினர் அல்லாத முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.