இந்தியா

ரயில்வே வாரியத் தலைவராக பொறுப்பேற்ற முதல் பெண்!

DIN


ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஜெயா வர்மா சின்ஹா இன்று (செப். 1) பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்மூலம் ரயில்வே வாரியத்துக்கு தலைமையேற்ற முதல் பெண் என்ற பெருமையை ஜெயா வர்மா பெற்றார்.

ரயில்வே வாரிய உறுப்பினராக உள்ள ஜெயா வர்மா சின்ஹாவை வாரியத்தின் தலைமை பொறுப்புக்கு, நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று (செப்.1) ஜெயா வர்மா, ரயில்வே வாரியத் தலைவராக பதவியேற்றுக்கொண்டார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அவர் இப்பதவியில் இருப்பார். 

இந்திய ரயில்வே போக்குவரத்துப் பணியில், 1988ஆம் ஆண்டு சேர்ந்த ஜெயா வர்மா, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு ரயில்வே மண்டலங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களில் ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சுவாமி தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1 கோடி

15 பேருந்துகளில்  காற்று  ஒலிப்பான்கள் பறிமுதல்

லாரி மீது தனியாா் பேருந்து மோதல்: 16 போ் காயம்

பெண்ணிடம் இணைய வழியில் ரூ.6.56 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT