இந்தியா

5 கிலோ கோகைன் போதைப் பொருளுடன் வந்த பயணி கைது!

ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப் பொருளை கடத்த முயன்ற ஆண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் இன்று தெரிவித்துள்ளது.

DIN

ஹைதராபாத்: ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப் பொருளை கடத்த முயன்ற ஆண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில், வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி விமான நிலையத்தில் பயணியிடமிருந்து போதை மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் சட்டம் 1985 இன் கீழ் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான கோகோயினை பறிமுதல் செய்தனர்.

பழுப்பு நிற டேப்பில் சுற்றப்பட்ட இந்த போதைப் பொருள், சூட்கேஸின் அடிப்பகுதியிலும், பெண்களின் கைப்பைகளின் அடிப்பகுதியிலும் சாமர்த்தியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்டவர் லாவோஸில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஹைதராபாத்துக்கு சென்று விட்டு தில்லிக்கு சென்று கொண்டிருந்தார்.

சர்வதேச சந்தையில் ரூ.50 கோடி மதிப்புள்ள இந்த 5 கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டதோடு பயணியும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

SCROLL FOR NEXT