ஜி-20 மாநாட்டில் பங்கேற்பவர்கள், பங்கேற்காதவர்கள் பட்டியல்!
தில்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள், புறக்கணித்துள்ள தலைவர்கள் பட்டியலைக் காணலாம்.
தில்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள், புறக்கணித்துள்ள தலைவர்கள் பட்டியலைக் காணலாம்.
நாட்டின் தலைநகரான தில்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளதால், இந்தப் பட்டியல் தற்போது இறுதியாகியுள்ளது.
அதிகாரம் மிக்க வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என சக்தி வாய்ந்த 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து ஜி-20 அமைப்பை உருவாக்கி உள்ளன. இதனால் இந்த அமைப்பு உலக அளவில் சக்திவாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த அமைப்பின் கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டு ஜி-20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது.
தில்லி பிரகதி திடலில் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூரோ, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கால்ஸ், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டசில்வா, செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோர் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு பதிலாக அந்நாடு சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
வரும் 7ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வருகிறார். அவரைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்கள் வருகைபுரியவுள்ளதால், தில்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தில்லியில் 39 மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.