இந்தியா

மகாராஷ்டிரத்தின் துணை முதல்வர்கள் ஷிண்டேவுடன் சந்திப்பு!

மகாராஷ்டிரத்தின் துணை முதல்வர்கள் அஜித் பவார், தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்தனர். 

DIN

மகாராஷ்டிரத்தின் துணை முதல்வர்கள் அஜித் பவார், தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்தனர். 

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி மாநிலத்தில் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. 

ஜல்னாவில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதற்காக மகாராஷ்டிர அரசு மன்னிப்பு கேட்டாலும், ஷிண்டே ராஜிநாமா செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்துவருகின்றன. 

முன்னதாக "வெட்கமற்ற" மகாராஷ்டிர அரசு என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கேலி செய்தார். செப்டம்பர் 2ஆம் தேதி உத்தவ் தாக்கரே ஜல்னாவுக்குச் சென்று, செப்டம்பர் 18 ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான மகாராஷ்டிர அமைச்சரவை துணைக் குழுக் கூட்டத்தில் மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் மற்றும் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் ஷிண்டே மற்றும் துணை முதல்வர்கள் பவார் மற்றும் ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜல்னாவில் மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்

இந்நிலையில், துணை முதல்வர்களான அஜித் பவார், தேவேந்திர ஃபட்னாவிஸ் இருவரும் முதல்வருடனான திடீர் சந்திப்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை உயா் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த வேண்டும்: தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் சிபு சோரன் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் நேரில் அஞ்சலி

தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களால் ஏற்படும் மன வேதனை காங்கிரஸ் எம்பிக்கு புரிந்திருக்கும்: அதிமுக எம்பி இன்பதுரை

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியல்: அரசியல் கட்சிகளிடமிருந்து இதுவரை புகாா் வரவில்லை- தோ்தல் ஆணையம்

நாடாளுமன்றத் தெருவில் காா் - பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT